ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருட்டு


ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் வீட்டில் 20 பவுன் நகை, பணம் திருடுபோனது

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே செங்கப்படை சுவாமிமல்லம்பட்டியை சேர்ந்தவர் பரசுராமன் (வயது74). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவருடைய மனைவி ஞானம்மாள், மகன் ராமமூர்த்தி, மருமகள் பாக்கியலட்சுமி ஆகியோருடன் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் ஞானம்மாள் குடும்பத்துடன் கடந்த 25-ந்தேதி வெளியூர் சென்றுவிட்டு நேற்று மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை, ரூ.17 ஆயிரம் ஆகியவை திருடு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் திருமங்கலம் தாலுகா போலீசில் பரசுராமன் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து திருமங்கலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story