20 டாஸ்மாக் கடைகள் இன்று மூடல்


ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் பகுதியில் 20 டாஸ்மாக் கடைகள் வியாழக்கிழமை மூடப்படும்.

தூத்துக்குடி

கயத்தாறு தாலுகா கட்டாலங்குளம் கிராமத்தில் வருகிற 11-ந் தேதி வீரன் அழகுமுத்துகோன் 312-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் யாதவ சமுதாய மக்களால் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதனால் கழுகுமலையில் இருந்து கோவில்பட்டி செல்லும் வழியில் உள்ள டாஸ்மாக் மதுபானக்கடைகள், மற்றும் கோவில்பட்டி மற்றும் கயத்தாறு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகள் ஆக மொத்தம் 35 டாஸ்மாக் மதுபானகடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள் அனைத்தும் 11-ந் தேதி மட்டும் மூடப்படும். அன்றைய தினம் 35 கடைகளிலும் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளது.

இதே போன்று ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் 9-ந் தேதி வரை ஓட்டப்பிடாரம், கயத்தார், தூத்துக்குடி, திருச்செந்தூர் பகுதியில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளையும், 12-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கயத்தாறு், ஓட்டப்பிடாரம், ஏரல், ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் பகுதிகளில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன.

இந்த டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.


Next Story