20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
நாகையில், ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிப்பாளையம்:
நாகையில், ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட 20 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சாலை விபத்து
சாலை விபத்து மூலம் நடக்்கும் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகையில் கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் சாலைப்பாதுகாப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் போலீசார் நெடுஞ்சாலை, மருத்துவம் மற்றும் போக்குவரத்து துறை மற்றும் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். கடந்த ஜூலை மாதம் நடந்த ஆய்வு கூட்டத்தில் நாகை மாவட்டத்தில் 11 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இருசக்கர வாகனம் ஒட்டும் நபர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளது தெரியவந்தது.
வாகன சோதனை
இருசக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், மாணவர்கள் அதிவேகமாக செல்வது, தலைக்கவசம் அணியாமல் செல்வது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் செல்வது போன்றவை விபத்துக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதைத்தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி தலைமையில் அதிகாரிகள் நாகையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பறிமுதல்
மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் நாகையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தின் அருகே நேற்று நடந்திய வாகன சோதனையில் ஓட்டுனர் உரிமம் இன்றி இயக்கப்பட்ட 20 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உரிமையாளர்கள் அபராதம் செலுத்திய பின் விடுவிக்கப்பட்டது.