சிறுமிகள்-சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை

சிறுமிகள்-சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை
x

புதருக்குள் தூக்கிச் சென்று 2 சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

புதருக்குள் தூக்கிச் சென்று 2 சிறுமிகள் மற்றும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ கோர்ட்டு அதிரடி தீர்ப்பளித்தது.

புதருக்குள் தூக்கிச்சென்றனர்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ரெங்கபாளையத்தை சேர்ந்தவர்கள் திருவன் (வயது 55), ரணவீரன் (65), கணேசன் (40), வெள்ளைச்சாமி (61), ராதாகிருஷ்ணன் (43). இவர்கள் 5 பேரும் கடந்த 2020-ம் ஆண்டு 6 வயது மற்றும் 7 வயது கொண்ட 2 சிறுமிகள் மற்றும் 7 வயது சிறுவனை முட்புதருக்குள் தூக்கிச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

4 ேபருக்கு சிறை

இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் நேற்று தீர்ப்பளித்தார். ரணவீரன், திருவன், கணேசன், வெள்ளைச்சாமி ஆகிய 4 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராதாகிருஷ்ணன் விடுதலை செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் 2 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

Related Tags :
Next Story