சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில்  நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது

திருநெல்வேலி

நெல்லை:

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

சிறுமி பலாத்காரம்

நெல்லை அருகே சீதபற்பநல்லூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் இசக்கிபாண்டி (வயது 26). கூலி தொழிலாளியான இவர் கடந்த 22-11-2017 அன்று நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பள்ளிக்கூடத்துக்கு தேவையான பொருட்கள் வாங்க வந்த சிறுமியிடம் இசக்கிபாண்டி பேச்சுக்கொடுத்தார். அப்போது அவர், சிறுமியை அடுத்த வாரமும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வருமாறு கூறினார்.

அதன்படி 29-11-2017 அன்று மீண்டும் நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்த சிறுமியை இசக்கிபாண்டி நெல்லை அருகே சீதபற்பநல்லூரில் உள்ள சமத்துவபுரத்துக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்குள்ள ஒரு வீட்டில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

20 ஆண்டு ஜெயில்

இதுகுறித்த புகாரின்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்கனி, நெல்லை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணிமுத்து, சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் போக்சோ சட்டத்தின் கீழ் இசக்கிபாண்டியை கைது செய்தனர். இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி அன்புசெல்வி, குற்றம் சாட்டப்பட்ட இசக்கிபாண்டிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார்.

இந்த வழக்கில் போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் ஜெப ஜீவராஜா ஆஜரானார். இந்த வழக்குக்கு தேவையான சாட்சிகள் மற்றும் ஆவணங்களை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி கோர்ட்டில் சமர்ப்பித்தார்.


Next Story