தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை


தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை
x
திருப்பூர்

திருப்பூர்:

திருப்பூரில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 45). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் கடந்த 27-7-2021 அன்று விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார்.

இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

20 ஆண்டு சிறை

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில் வெங்கடேசுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார். சிறப்பாக புலன் விசாரணை செய்த வடக்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ஜி.பாபு பாராட்டினார்.


Next Story