எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின
தும்பேரி கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 200 காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
வாணியம்பாடியை அடுத்த தும்பேரி கிராமத்தில் எருது விடும் விழா உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் கலந்துகொண்டு விழாவை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், ஆலங்காயம், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி, வேலூர், கிருஷ்ணகிரி, மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் சுமார் 200-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின.
வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.77,777, இரண்டாவது பரிசாக ரூ.66,666, மூன்றாவது பரிசு ரூ.55,555 என மொத்தம் 64 பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தாசில்தார் சாந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சூரியகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.