திருப்பரங்குன்றத்தில் 200 ஜோடிகளுக்கு திருமணம்


திருப்பரங்குன்றத்தில் 200 ஜோடிகளுக்கு திருமணம்
x
தினத்தந்தி 21 Aug 2023 1:00 AM IST (Updated: 21 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

சுபமுகூர்த்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்றுஒரே நாளில் 200 திருமண ஜோடிகள் உறவினர்களுடன்குவிந்தனர்

மதுரை

திருப்பரங்குன்றம்,

சுபமுகூர்த்த நாளையொட்டி திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்றுஒரே நாளில் 200 திருமண ஜோடிகள் உறவினர்களுடன்குவிந்தனர்

200 ஜோடிகள்

ஆவணிமாத வளர்பிறையின் முதல் முகூர்த்த நாள் என்பதால் நேற்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 94 திருமணம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆகவே நேற்று காலை 5.30 மணியளவில் பிரம்ம முகூர்த்தவேளையில் இருந்து 10.30 மணிவரை திருமணங்கள் நடந்தது. பதிவு செய்யப்பட்ட 94 திருமண ஜோடிகள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள் என்று கோவிலுக்குள் கூட்டம் குவிந்தது.

இதே சமயம் திருப்பரங்குன்றத்தில் உள்ள 85 திருமண மண்டபங்களில் திருமண ஜோடிகளும் அவர்களது உறவினர்களும் குவிந்தனர். மேலும் 15-க்கும் மேற்பட்ட காதல் ஜோடிகள் தங்களது நண்பர்களுடன் வந்து மாலைமாற்றி, தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இதனையொட்டி நேற்று ஒரே நாளில் சுமார் 200 ஜோடிகள் மாலையும் கழுத்துமாக கோவிலுக்குள் காணப்பட்டனர்.

திருப்பரங்குன்றம்

இந்த நிலையில் மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டிற்கு வந்தவர்களில் பெரும்பாலானோர் கோவிலுக்குள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர். இதுதவிர நேற்று, ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வெளியூர் பக்தர்களும் வந்தனர்.. இதனால் கோவிலுக்குள்ளும், கோவிலின் வெளியே சன்னதி தெருவிலுமாக கூட்டம் அலைமோதியதில் திருப்பரங்குன்றம் திணறியது. இந்தநிலையில் கோவிலுக்குள் திருமணம் முடிந்ததும் மூலஸ்தானத்திற்கு திருமண ஜோடிகள் சென்று வருவதற்கு என்று ஒரு தனி வழியும். பக்தர்கள் மற்றும் வெளியூர் நபர்கள்சாமி தரிசனத்திற்காகசென்று வருவதற்கு மற்றொரு வழியும், சிறப்பு தரிசனத்திற்காகஇன்னொரு வழியும் என்று கோவிலுக்குள்ளே தடுப்புகள் அமைக்கப்பட்டு 4 வழிகள் ஏற்படுத்தப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் ஒரளவிற்குகூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.

இதே சமயம் திருமணத்திற்கும். அ.தி.மு.க. மாநாட்டுக்குமாக வந்த வாகனங்கள் இடையே திருப்பரங்குன்றம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் இருந்தது. அதை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.


Next Story