200 விநாயகர் சிலைகள் கரைப்பு


200 விநாயகர் சிலைகள் கரைப்பு
x

கிருஷ்ணகிரி அணையில் 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர்.

கிருஷ்ணகிரி

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த மாதம், 31-ந் தேதி கொண்டாடப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாடாத நிலையில், இந்த ஆண்டு எந்த கட்டுப்பாடுகளும் இன்றி விநாயகர் சிலை வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினார்கள்.

விநாயகர் சதுர்த்தி விழா முடிந்து 5-வது நாளான நேற்று கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையின் பின்புறம் சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தனர். நேற்று மதியம் நகர இந்து முன்னணி சார்பில், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலம், காந்திசாலை, ரவுண்டானா வழியாக கே.ஆர்.பி. அணையின் பின்புறம் 20-க்கும் மேற்பட்ட சிலைகளுக்கு பூஜைகள் செய்து நீரில் கரைத்தனர். இதில், கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, திருப்பத்துார், தர்மபுரி, தொப்பூரில் இருந்தும், 200-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை வாகனங்களில் கொண்டு வந்து கரைத்தனர். பாதுகாப்பு பணியில் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.


Next Story