கூடலூரில் 200 கிராம் கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது


கூடலூரில் 200 கிராம் கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது
x
தினத்தந்தி 10 May 2023 12:45 AM IST (Updated: 10 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் 200 கிராம் கஞ்சா பறிமுதல்-2 பேர் கைது

நீலகிரி

கூடலூர்

கூடலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது தொரப்பள்ளி பகுதியில் சந்தேகப்படும்படி 2 பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்களைப் பிடித்து சோதனை செய்த போது 200 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கர்நாடக மாநிலம் குண்டல்பெட் பகுதியைச் சேர்ந்த ஜியா (வயது 32), கூடலூர் புத்தூர் வயலைச் சேர்ந்த முஜீப் (40) என தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.மேலும் ஜியா, முஜீப் ஆகியோரை கைது செய்தனர்.


Next Story