மேலூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்


மேலூரில் 200 கிலோ குட்கா பறிமுதல்
x

மேலூரில் 200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

மதுரை

மேலூர்,

மேலூர் போலீசார் தீவிரமாக ரோந்து சுற்றி வந்தனர். அப்போது சிவகங்கை ரோட்டில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் கரையப்பட்டியை சேர்ந்த அப்பாஸ் அலி (வயது 45), சிங்கம்புணரியைச் சேர்ந்த ஜெயராஜ் (54), மேலூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த அப்துல்அஜீஸ் (29) என தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து 200 கிலோ குட்கா, ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.


Related Tags :
Next Story