200 கிலோ குட்கா பறிமுதல் 2 பேர் கைது
மார்த்தாண்டத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குழித்துறை,
மார்த்தாண்டத்தில் கடையில் பதுக்கி வைத்திருந்த 200 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடைகளில் சோதனை
மார்த்தாண்டம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் அறிவுரையின் பேரில் தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரராஜ் தலைமையில் போலீசார் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு கடையில் அரசால் தடை செய்யப்பட்ட 400 கிலோ குட்கா பொருட்கள் மூடைகளில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
2 ேபர் கைது
அவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மேலும் இதுதொடர்பாக கடையில் இருந்த விற்பனையாளர்கள் கிறிஸ்டோபர் (வயது49), முருகதாஸ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் மார்த்தாண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.