200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்


200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
x

ஆட்டோவில் கடத்திய, 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிபட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.

இதனையடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிேலா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சிலுவத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணக்குமார் (வயது 24) மற்றும் ஆட்டோவில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் (37), அதிகாரிபட்டியை சேர்ந்த ஜேம்ஸ் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story