விவசாய தொழிலாளர்களை காக்க வேண்டும்; தமிழக அரசுக்கு முத்தரசன் வலியுறுத்தல்
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– வறட்சியின் கோரப்பிடியிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற நொடிப் பொழுதும் காலதாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி தண்ணீர் கொ
சென்னை,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
வறட்சியின் கோரப்பிடியிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற நொடிப் பொழுதும் காலதாமதமின்றி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காவிரி தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்ட கர்நாடக அரசு, துணை போன மத்திய அரசின் துரோகம் இருபருவ மழைகளும் பொழியாத இயற்கையின் கோபம் அனைத்துமாக சேர்ந்து காவிரி பாசன மாவட்டங்கள் மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழகமும் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவிப்பதை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ இயலாது.
கடந்த 30–12–2016–ல் அமைச்சர்கள் குழு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகளை அழைத்து பேசியது வரவேற்கத்தக்கது. கோரிக்கைகளை செவிமடுத்து கேட்ட அமைச்சர்கள் குழு, கோரிக்கைகள் குறித்து, முதல்–அமைச்சருடன் கலந்து ஆலோசித்து விரைவில் நல்ல முடிவுகளை அறிவிப்பதாக தெரிவித்தார்கள். அத்தகைய நல்ல முடிவுகளை தாமதமின்றி அறிவித்து பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை விவசாயத் தொழிலாளர்களை காக்கவேண்டிய பெரும் பொறுப்பும், கடமையும் அரசின் முன் உள்ளது.
அதிர்ச்சி மரணத்தாலோ, தற்கொலை செய்துகொள்வதாலோ நமது பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையாது. ஒன்றுபட்டு போராட முன் வாருங்கள் என விவசாய பெருங்குடி மக்களை கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.