மரக்கன்றுகள் நடுவதை புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மரக்கன்றுகள் நடுவதை புத்தாண்டு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
x
தினத்தந்தி 2 Jan 2017 4:30 AM IST (Updated: 2 Jan 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

‘வார்தா’ புயல் தாக்குதலின்போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் வீடு அருகிலும், நிறைய மரங்கள் சாய்ந்து விழுந்தன. அந்த இடங்களில் நேற்று தனது மனைவி துர்காவுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் மரக்கன்றுகளை நட்டார்.

சென்னை,

பின்னர், அவர் தமிழக மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:–

புத்தாண்டு பிறந்திருக்கும் இந்த மகிழ்ச்சியான நேரத்தில் மக்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். கடந்த ஆண்டு நிகழ்ந்த பேரிடர்களால் நாம் கணக்கில் அடங்காத மரங்களை இழந்திருக்கிறோம். குறிப்பாக ‘‘வார்தா’’ புயலின் போது வீழ்ந்த மரங்கள் எல்லாம் ‘‘குவியல் குவியலாக’’ கிடப்பதைப் பார்த்தோம். சுற்றுச்சூழலை பாதுகாக்க நம்மால் முடிந்தவரை மரக்கன்றுகளை நடுவதோடு, அவற்றை பாதுகாத்து பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் அனுபவிக்கும் இயற்கை செல்வங்களை நம் வருங்கால சந்ததியினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. ஆகவே, இந்த மரக்கன்றுகள் நடும் பணியை ஒவ்வொருவரும் ‘‘புத்தாண்டு உறுதிமொழியாக’’ எடுத்துக் கொண்டு நாட்டின் இயற்கை செல்வத்தை காப்பாற்ற முன்வர வேண்டும் என்று தி.மு.க. தோழர்களையும், பொதுமக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story