தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது சு.திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று சு.திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
ஜல்லிக்கட்டு
தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் நீதிமன்றங்களில் தொடர்ந்து வழக்கு தொடுத்து வந்தனர். இந்தப் பின்னணியில் தான் கடந்த 11–7–2011–ல் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளைச் சேர்த்து ஓர் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்பட்ட வழக்கில் கடந்த 7–5–2014 அன்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில் மத்திய அரசின் அறிக்கை செல்லுபடியாகும் என்று கூறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடைவிதித்தது. இந்தப் பின்னணியில் கடந்த 2015, 2016 ஆகிய ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இது தமிழ் மக்களிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
கண்துடைப்பு நாடகம்
இந்நிலையில் மத்திய பா.ஜ.க. அரசு கடந்த ஆண்டு ஜனவரி 8–ந் தேதி வெளியிட்ட அறிக்கையில் காட்சிப்படுத்தப்படும் பட்டியலில் இருந்து காளை மாடுகளுக்கு விலக்களித்தது. ஆனால் அந்த பட்டியலில் இருந்து காளை மாடுகளை நிரந்தரமாக நீக்காமல், விலக்களித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. மத்திய பா.ஜ.க. அரசு இந்த அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு, அமைச்சரவையின் ஒப்புதலையோ, விலங்குகள் நல வாரியத்தையோ கலந்து ஆலோசிக்கவில்லை.
இச்சூழலில் இந்த அறிக்கையை எதிர்த்து மத்திய அரசைச் சார்ந்த விலங்குகள் நல வாரியமும், சமூக ஆர்வலர்களும் தொடுத்த வழக்கில் மத்திய பா.ஜ.க. அரசின் அறிவிக்கையை 11–2–2016–ல் சுப்ரீம் கோர்ட்டு தடைசெய்தது. சுப்ரீம் கோர்ட்டின் ஆணையை மத்திய அரசின் நிர்வாக ரீதியான அறிக்கையின் மூலம் ரத்து செய்துவிட முடியுமா? என்கிற அடிப்படை சட்ட அறிவுகூட இல்லாமல், தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகவே, மத்திய பா.ஜ.க. அரசு இந்த கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியது.
காங்கிரஸ் கட்சி ஆதரவு
மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப் போக்கு காரணமாக தமிழகத்தில் வருகிற தைத் திருநாளில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டு வருவதை கண்டிக்கிற வகையிலும், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் பிறப்பிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க கூறியும் வருகிற 3–1–2017 அன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவிப்பதோடு, அதில் பங்கேற்பதென முடிவெடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் சார்பாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய மந்திரி இ.எம்.சுதர்சனநாச்சியப்பன் ஆகியோர் பங்கேற்பார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களோடு பெருமளவில் மூவர்ணக் கொடியை கையில் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story