தமிழக முதல்-அமைச்சராக சசிகலா விரைவில் பொறுப்பு ஏற்க வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை


தமிழக முதல்-அமைச்சராக சசிகலா விரைவில் பொறுப்பு ஏற்க வேண்டும் - தம்பிதுரை கோரிக்கை
x
தினத்தந்தி 2 Jan 2017 11:28 AM IST (Updated: 2 Jan 2017 11:28 AM IST)
t-max-icont-min-icon

சென்னை அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளரும் , பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுர கூறியதாவது:- சசிகலா விரைவில் தமிழக முதல் அமைச்சராக வேண்டும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் தான் அ.தி.மு.க பணிகள், அரசு திட்டங்களை நிறைவேற்றமுடியும்

சென்னை

அ.தி.மு.க கொள்கைபரப்பு செயலாளரும் , பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுர கூறியதாவது:-

சசிகலா விரைவில் தமிழக முதல் அமைச்சராக வேண்டும்.  கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் ஒருவரிடமே இருக்க வேண்டும். அதிகாரம் ஒரே இடத்தில் இருந்தால் தான்  அ.தி.மு.க பணிகள், அரசு திட்டங்களை நிறைவேற்றமுடியும். கட்சி தலைமையும் ஆட்சி தலைமையும் வெவ்வேறாக இருப்பது ஏற்புடையது அல்ல. அ.தி.மு.கவினர் மனநிலையை ஏற்று சசிகலா தமிழக முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்க வேண்டும். சசிகலா முதல்வராவது தமிழகத்திற்கும், அ.தி.மு.கவுக்கு இன்றியமையாதது.இவ்வாறு அவர் கூறினார்.

Next Story