நாகையில் மேலும் 2 விவசாயி பலி இதுவரை 33 பேர் பலியான சோகம்


நாகையில் மேலும் 2 விவசாயி பலி இதுவரை 33 பேர் பலியான சோகம்
x
தினத்தந்தி 2 Jan 2017 12:35 PM IST (Updated: 2 Jan 2017 3:03 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் தற்போது மேலும் 2 விவசாயிகள் பயிர்கள் கருகியதால் இறந்துள்ளனர்.து வரை 33 விவசாயிகள் இறந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்துள்ளனர். ஆனால் மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாததாலும், பருவ மழை பொய்த்ததாலும் பயிர்கள் கருக தொடங்கி உள்ளது. இந்த வேதனையில் விவசாயிகள் தற்கொலை, மாரடைப்பால் மரணம் போன்றவைகள் நிகழ்ந்து வருகிறது. நாகை மாவட்டத்தில் தற்போது மேலும் 2 விவசாயிகள் பயிர்கள் கருகியதால் இறந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வெண்மணி ஊராட்சி கீழ காவாலக்குடியை சேர்ந்தவர் தம்புசாமி (60). விவசாயி. இவர் 2 ஏக்கர் நிலத்தில் சம்பா சாகுபடி செய்திருந்தார். பயிர்கள் கருகியதால் வேதனையில் இருந்தார்.நேற்று மாலை வயலுக்கு சென்ற அவர் மயங்கி விழுந்து இறந்தார். உறவினர்கள் அங்கு சென்று அவரது உடலை மீட்டு வந்தனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை அருகே உள்ள கீழ நாட்டிருப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (57). இவர் அப் பகுதியை சேர்ந்த தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சம்ப£ சாகுபடி செய்திருந்தார்.இதற்காக ரூ. 2 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடை ந்த பன்னீர் செல்வம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நாகை மாவட்டத்தில் பயிர் கருகியதால், தற்கொலை, மாரடைப்பால் மரணம் என இது வரை 33 விவசாயிகள் இறந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். 

Next Story