விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு மு.க.ஸ்டாலின் பேட்டி


விவசாயிகள் போராட்டத்திற்கு தி.மு.க ஆதரவு மு.க.ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 2 Jan 2017 9:02 AM GMT (Updated: 2 Jan 2017 9:31 AM GMT)

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி விவசாய சங்கம்சார்பில் 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல் போராட்டம் நடக்கிறது. இதற்காக விவசாய சங்கங்கள் தலைவர் பி.ஆர். பாண்டியன் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.


சென்னை,

தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்ககோரி விவசாய சங்கம்சார்பில் 5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் மறியல்   போராட்டம் நடக்கிறது. இதற்காக  விவசாய சங்கங்கள் தலைவர் பி.ஆர். பாண்டியன் முக்கிய தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

இன்று காலை தி.மு.க பொரு ளாளரும் எதிர்க் கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலி னுடன் இன்று காலை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து ஆதரவு கேட்டார்.
அதன் பின்னர் மு.க. ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அவர் கூறியதாவது:-

உடனே சட்டமன்றத்தை கூட்டி தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண் டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்.இது குறித்து தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகி றோம். ஆனால் இது வரை எந்த பதிலும் அரசிடம் இருந்து வரவில்லை

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்கவும் கடிதம் கொடுத்து இருக்கிறோம்.ஆனால் செவிடன் காதில் ஊதிய சங்கு போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத் திற்கு எப்போதும் தி.மு.க ஆதரவு அளித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் 5-ந் தேதி நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கும் தி.மு.க ஆதரவு அளிக்கிறது.

அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டிற்கு ஆதர வாக நாளை நடக்கும்  போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அந்த போராட்டம் பெரிய அள வில் நடக்க உள்ளது.
ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

விவசாயிகள்  சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன் கூறுகையில்  விவசாயிகள் நடத்தும் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தோம்.

இது பற்றி தமிழக அரசு வாய் திறக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும்.முதல்-அமைச்சர் அறிக்கை வெளியிட்டால் விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக   இருக்கும். விவசாயிகள் பிரச்சினை யில் மத்திய அரசு வஞ்சிக்கும் வகையில் செயல்படுகிறது என்றார்.

Next Story