அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்
அ.தி.மு.க. பொது செயலாளர் சசிகலா கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். அதன்படி வருகிற ஜனவரி 4ந்தேதி முதல் 9ந்தேதி வரை மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்கிறார்.
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு மாவட்டத்திற்குட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி மற்றும் நகரம் உள்ளிட்ட அனைத்து செயலாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் கட்சி பணிகள் பற்றி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படும். அக்கட்சியின் தொகுதி வாரியான பொது குழு உறுப்பினர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடப்பட்டுள்ளது.

Next Story