ராய்ச்சூரில், கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் மனைவி-2 மகள்கள் உயிருடன் எரித்துக் கொலை வாலிபர் போலீசில் சரண்


ராய்ச்சூரில், கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் மனைவி-2 மகள்கள் உயிருடன் எரித்துக் கொலை வாலிபர் போலீசில் சரண்
x
தினத்தந்தி 3 Jan 2017 2:00 AM IST (Updated: 3 Jan 2017 12:58 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில், கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் மனைவி-2 மகள்களை உயிருடன் எரித்து கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு,

ராய்ச்சூரில், கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் மனைவி-2 மகள்களை உயிருடன் எரித்து கொலை செய்த வாலிபர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளத்தொடர்பு

ராய்ச்சூர் மாவட்டம் மரக்கெரே கிராமத்தை சேர்ந்தவர் ராகவேந்திரா (வயது 33). இவருடைய மனைவி மாதுரி (28). இந்த தம்பதிக்கு மாத்யா (8) மற்றும் மானசா (4) என்ற 2 மகள்கள் இருந்தனர். ராகவேந்திராவுக்கும் அந்த பகுதியில் வசித்து வரும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மாதுரிக்கு தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கள்ளத்தொடர்பை கைவிடும்படி தனது கணவரிடம் கூறி வந்து இருக்கிறார். இருப்பினும், ராகவேந்திரா கள்ளத்தொடர்பை கைவிட மறுத்துள்ளதாக தெரிகிறது. இதுதொடர்பாக அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிருடன் எரித்துக் கொலை

நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றவே ஆத்திரமடைந்த ராகவேந்திரா தனது மனைவி மற்றும் 2 மகள்களை உயிருடன் எரித்து கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்த தனது மனைவி மற்றும் 2 மகள்களின் மீது மண்எண்ணெயை ஊற்றி அவர்களின் உடல்களில் தீவைத்து விட்டு ஓடிவிட்டார்.

இதனால், அவர்கள் 3 பேரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில், நேற்று காலையில் அவருடைய வீட்டின் அருகே சென்ற கிராம மக்கள் சிலர், 3 பேரும் உடல் கருகி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக அவர்கள் யரகெரே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசில் சரண்

அதன்பேரில், போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்து இறந்து போன 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாதுரியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் யரகெரே போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராகவேந்திராவை வலைவீசி தேடிவந்தனர்.

இந்த நிலையில், நேற்று மதியம் ராகவேந்திரா யரகெரே போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம், ராகவேந்திரா தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சோகம்

கள்ளத்தொடர்பை கைவிட கூறியதால் மனைவி-2 மகள்களை வாலிபர் உயிருடன் தீவைத்து எரித்துக் கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story