செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் கிடைத்த நன்மை என்ன? வெள்ளை அறிக்கை கோரி ஆம் ஆத்மி இன்று ஆர்ப்பாட்டம்
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று 54 நாட்களாகியும் பிரச்சினை தீரவில்லை. எனவே ரூபாய் நோட்டுகளை திரும்ப ப
சென்னை,
ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் வசீகரன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்று 54 நாட்களாகியும் பிரச்சினை தீரவில்லை. எனவே ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற்றதால் நாட்டின் பொருளாதாரத்துக்கு கிடைத்த பயன் என்ன? என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் அகில இந்திய தலைவர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். நாடு முழுவதும் ஆம் ஆத்மி கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நாளை(இன்று) மதியம் 3 மணியளவில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் கைப்பற்றப்பட நகை–பணம் விவரங்கள் அடங்கிய பட்டியலை வருமான வரித்துறை வெளியிட வேண்டும். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மத்திய–மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பு ஏற்றுள்ளதை ஆம் ஆத்மி கட்சி எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.