கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடந்த 1,653 பேர் ரெயிலில் அடிபட்டு சாவு ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவல்


கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடந்த 1,653 பேர் ரெயிலில் அடிபட்டு சாவு ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவல்
x
தினத்தந்தி 3 Jan 2017 2:27 AM IST (Updated: 3 Jan 2017 2:27 AM IST)
t-max-icont-min-icon

மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் கடந்த ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடந்தபோது 1,653 பேர் ரெயிலில் அடிபட்டு பலி

மும்பை,

மத்திய, மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் கடந்த ஆண்டில் மட்டும் தண்டவாளத்தை கடந்தபோது 1,653 பேர் ரெயிலில் அடிபட்டு பலியாகி உள்ளதாகவும், 348 பேர் படுகாயம் அடைந்ததாகவும் ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ரெயில் பயணிகள் உயிரிழப்பு

மும்பையில் மத்திய, மேற்கு ரெயில்வேக்கள் சார்பில் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை தினசரி சுமார் 75 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் ரெயில் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதை தடுக்க ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

1,653 பேர் பலி

இருப்பினும் ரெயில் விபத்துகளில் பயணிகளின் உயிரிழப்பு என்பது தொடர்கதையாகி வருவதுடன் அதிகரித்தும் வருகிறது. இதில், கடந்த ஆண்டில் (2016) மும்பையில் தண்டவாளங்களை கடக்கும் போது மட்டும் ரெயிலில் அடிபட்டு 1,653 பேர் பலியாகி உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது.

இதில், அதிகபட்சமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் மட்டும் 1,068 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் 585 பேர் உயிரிழந்து உள்ளனர். 348 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story