”அம்மா கல்வியகம்” இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை தொடங்கி வைத்தார்: ஓபிஎஸ்


”அம்மா கல்வியகம்” இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை தொடங்கி வைத்தார்: ஓபிஎஸ்
x
தினத்தந்தி 1 March 2017 12:13 PM IST (Updated: 1 March 2017 12:15 PM IST)
t-max-icont-min-icon

அம்மா கல்வியகம் என்ற பெயரில் இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

சென்னை,

அம்மா கல்வியகம்  என்ற இலவச ஆன்லைன் கல்வி இணையதளத்தை முன்னாள் முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான அம்மா கல்வியகம் திறக்கப்பட்டுள்ளது

 ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வுக்கு இந்த இணையம் பேருதவி செய்யும் . அம்மா கல்வியகம் இணையதளத்தில் +2 படிப்பிற்கான பயிற்சியும் அளிக்கப்படும்  கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இந்த இணைய தளம் உதவியாக இருக்கும்  என்று அவர் தெரிவித்தார். www.ammakalviyagam.in என்ற பெயரில் இந்த இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.

Next Story