தனுஷ் தனது மகன் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரி கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு


தனுஷ் தனது மகன் டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடக்கோரி  கதிரேசன், மீனாட்சி தம்பதியினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு
x
தினத்தந்தி 1 March 2017 3:03 PM GMT (Updated: 1 March 2017 3:03 PM GMT)

நடிகர் தனுஷ்க்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக்கோரி கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.


மதுரை,

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும், தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும்” என்றும் மேலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்கள் கூறும் தகவல் உண்மையானது இல்லை, எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் தனுஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை மதுரை ஐக்கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக்கோரி கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில்  மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். 

Next Story