ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும்: நெடுவாசல் போராட்ட குழுவின் ஒரு பிரிவு அறிவிப்பு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டம் தொடரும் என நெடுவாசல் போராட்ட குழுவின் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.
சென்னை,
நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினால் விவசாயம் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில், முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை போராட்ட குழுவினர் நேற்று நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மாநில அரசு அனுமதி வழங்காது என போராட்டக்கார குழுவினரிடம் உறுதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக 15வது நாளாக போராட்டம் தொடருகிறது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை கைவிடும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக்காரர்களில் ஒரு பிரிவினர் அறிவித்துள்ளனர்.

Next Story