2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி


2 நாள் சுற்றுப்பயணமாக சென்னை வந்தார் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி
x
தினத்தந்தி 2 March 2017 3:09 PM GMT (Updated: 2 March 2017 3:08 PM GMT)

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 2 நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வந்தார்.

சென்னை, 

சென்னை, தாம்பரத்தில் உள்ள, இந்திய விமானப்படை தளத்தில், சிறந்த வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, நாளை காலை(மார்ச் 3) நடக்கிறது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறார். அதற்காக அவர் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து விமானப்படை விமானத்தில் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காஞ்சிபுரம் ஆட்சியர் வரவேற்றனர்.

இன்று இரவு கிண்டி கவர்னர் மாளிகையில் தங்கும் அவர்  நாளை(மார்ச் 3) காலை, 9:00 மணியில் இருந்து, 11:20 வரை, விமானப்படை வீரர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்  மதியம்  12:00க்கு அடையாறில் இந்திய பெண்கள் சங்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்று விட்டு பிற்பகல் 1:15க்கு டெல்லி புறப்பட்டு செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் வருகையை ஒட்டி, சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Next Story