ஜல்லிக்கட்டு போராட்டத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு கேட்டு வழக்கு
இந்திய மாணவர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் மாரியப்பன்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் நடந்த போராட்டத்தில் எங்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அமைதியாக நடந்த இந்த போராட்டத்தை கலைக்க, போலீசார் தடியடி நடத்தினார்கள். அப்போது எங்கள் அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளை கொடூரமாக தாக்கியுள்ளனர். எங்கள் அமைப்பை சேர்ந்த தீபக் சந்திரா, கணேஷ்குமார், விஜயகுமார், விஜயலட்சுமி உள்பட பலரை போலீசார் கொடூரமாக தாக்கினர். இதில், அவர்களுக்கு பலத்த காயமும், எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த தடியடி சம்பவத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதி சி.டி.செல்வம் விசாரித்தார். மனுவுக்கு பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

Next Story