அவதூறு வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு
அவதூறு வழக்கில் விஜயகாந்த் ஆஜராகாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.
விருதுநகர்
கடந்த 2012–ம் ஆண்டு விருதுநகரில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் அரசு வக்கீல் மங்களசாமி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, மார்ச் 2–ந் தேதி விஜயகாந்த் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இன்று அந்த வழக்கு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஜயகாந்துக்கு உடல் நலம் சரியில்லாததால் அவரால் கோர்ட்டில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வக்கீல் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்த மாதம்(ஏப்ரல்) 13–ந் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார். அன்றைய தினம் விஜயகாந்த் கண்டிப்பாக கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story