ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவன் மீட்பு; பெண் கைது
ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுவனை கொடுங்கையூரில் தனிப்படை போலீசார் மீட்டனர்.
ராயபுரம்,
சிறுவனை கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆண் குழந்தை வளர்க்க ஆசைப்பட்டு அவனை கடத்தியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சிறுவன் மாயம்
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் பரக்கத் அலி(வயது 35), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி உசேனா(32). இவர்களுடைய மகன் ஆசிப்(3). நேற்று முன்தினம் காலை உசேனா, தைராய்டு சிகிச்சை மேற்கொள்வதற்காக தனது மகன் ஆசிப்புடன் அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
ஆஸ்பத்திரியில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்ததால் மகனை அங்கிருந்த இருக்கையில் உட்கார வைத்துவிட்டு வரிசையில் நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் தனது மகன் மாயமானதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் அவர் தேடிப்பார்த்தும் மகனை காணவில்லை.
கடத்தல்
இதுபற்றி அவர், ஸ்டான்லி ஆஸ்பத்திரி வளாக போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஆஸ்பத்திரி வளாக ஊழியர்கள் மற்றும் நோயாளிகளிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவனை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிஸ்கெட் கொடுத்து அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயகுமார் தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து கடத்தப்பட்ட சிறுவனை பல இடங்களில் தேடிவந்தனர். ஆஸ்பத்திரியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர்.
கேமராவில் பதிவு
அதில், ஒரு பெண் அந்த சிறுவனை ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அந்த பெண் சிறுவனை அழைத்துச் சென்ற கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோ காட்சிகளை நேற்று போலீசார் வெளியிட்டனர்.
இந்தநிலையில் நேற்று மதியம் கடத்தப்பட்ட சிறுவன் கொடுங்கையூர் மூலக்கடை பகுதியில் உள்ள ஒரு டீக்கடை அருகே இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சிறுவன் மீட்பு
உடனடியாக தனிப்படை போலீசார் கொடுங்கையூருக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சிறுவன் ஆசிப்பை பத்திரமாக மீட்டனர். சிறுவனுடன் இருந்த ஒரு பெண் மற்றும் ஒரு முதியவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அந்த பெண் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த சுபாஹனி(45) என்பதும், அவர் தான் சிறுவன் ஆசிப்பை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான சுபாஹனி போலீசாரிடம் அளித்து உள்ள வாக்குமூலம் வருமாறு:-
மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை
நான் சென்னை எண்ணூர், காமராஜர் நகரில் தனியாக வசித்து வருகிறேன். என்னுடைய கணவர் முகமதுசுல்தான் இதே பகுதியில் கறிக்கடை நடத்திவந்தார். 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவள் என்னுடைய அண்ணன் வீட்டில் வளர்ந்து வருகிறாள்.
நான் இங்கு அருகில் உள்ள வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வருகிறேன். எனக்கு மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்த நோய் உள்ளது. இதற்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தேன்.
ஆண் குழந்தை வளர்க்க ஆசை
சிகிச்சைக்காக நேற்று முன்தினம் ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு சென்றபோது அங்கு சிறுவன் ஆசிப் தனியாக நின்று அழுது கொண்டிருந்தான். அவன் தனது தாயாரை காணவில்லை என்று கூறி அழுதான். அவனிடம் பெயர், விலாசம் குறித்து கேட்டேன். தனது பெயரை தவிர வேறு எதுவும் அவனுக்கு சொல்ல தெரியவில்லை.
எனக்கு ஆண் குழந்தை மீது இருந்த ஆசையால் அவனை நானே வளர்க்க முடிவு செய்தேன். என்னிடம் இருந்த பிஸ்கெட்டை அவனுக்கு கொடுத்து, என்னுடன் வருகிறாயா? என்று கேட்டேன். அவனும் வருகிறேன் என கூறியதால் அவனை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு வெளியே சென்று ஆட்டோ பிடித்து மூலகொத்தளம் பஸ் நிலையத்துக்கு சென்றேன்.
அங்கிருந்து பஸ் ஏறி எண்ணூர் பகுதிக்கு சென்றேன். பின்னர் இரவில் சென்டிரலில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற மின்சார ரெயிலில் ஏறி கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கவரப்பேட்டை ரெயில் நிலையத்தில் இறங்கினேன். இரவில் சிறுவனுடன் ரெயில் நிலைய நடைமேடையில் படுத்து தூங்கினேன்.
ஒப்படைக்க வந்தோம்
பின்னர் நேற்று காலை சிறுவனை அழைத்துக் கொண்டு எண்ணூரில் உள்ள எனது வீட்டுக்கு வந்தேன். அப்போது என்னுடைய வீட்டின் உரிமையாளரான விஜயன்(87) வீட்டு வாசலில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். அவர், என்னுடன் வந்த சிறுவன் ஆசிப்பை பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அந்த சிறுவன் கடத்தப்பட்டதாக பத்திரிகை மற்றும் டி.வி.களில் செய்தி வந்துள்ளது. இங்கு நீ அந்த சிறுவனுடன் வந்துள்ளாய். நீ போலீசாரிடம் மாட்டிக்கொள்ளும் முன் அந்த சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்துவிடலாம் என்றார்.
அதை ஏற்று நானும், விஜயனும் ஆசிப்பை அவனது பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக கொடுங்கையூர் பகுதிக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த போலீசார் என்னை கைது செய்துவிட்டனர். இவ்வாறு அவர் கூறியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
பெற்றோரிடம் ஒப்படைப்பு
அவரிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஆசிப்பை பெற்றோரிடம் போலீசார் ஒப்படைத்தனர். சிறுவன் ஆசிப்பை பார்த்த பரக்கத்அலி மற்றும் உசேனா இருவரும் தங்கள் செல்ல மகனை வாரி அணைத்து முத்த மழை பொழிந்தனர். சிறுவனை மீட்ட போலீசாருக்கு அவர்கள் இருவரும் கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.
கைதான சுபாஹனியிடம் சிறுவன் கடத்தல் தொடர்பாக தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தப்பட்ட சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைக்கும்படி கூறிய விஜயனை போலீசார் பாராட்டினர்.
போலீஸ் துணை கமிஷனர் ஜெயகுமார் கூறும்போது, “சிறுவன் கடத்தப்பட்ட உடன் 4 தனிப்படை அமைத்து சுமார் 50 போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிறுவனை கடத்தியது பெண் தான் என்பதை கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து உறுதி செய்தோம். இதுபற்றி அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நேற்று காலை மூலக்கடை பகுதியில் உள்ள டீக்கடையில் சிறுவன் இருப்பது எங்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்று சிறுவனை மீட்டு, கடத்திய பெண்ணை கைது செய்துவிட்டோம்” என்றார்.

Next Story