காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஷபிர் அகமது ஷா கைது


காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஷபிர் அகமது ஷா கைது
x
தினத்தந்தி 3 March 2017 12:20 PM IST (Updated: 3 March 2017 12:20 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் பிரிவினைவாத தலவர்களில் ஒருவரான ஷபிர் அகமது ஷாவை அம்மாநில போலீஸ் கைது செய்தது. காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களில் ஒருவரான ஷபிர் அகமது ஷாவை இன்று ட்ரால் நகரில் போலீசார் கைது செய்தனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீர் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத் மாநாட்டு அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஷபிர் அகமதுஷா  இன்று கைது செய்யப்பட்டார். ஸ்ரீநகரில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டிரால் நகரில் இன்று பிற்பகல் பொதுக் கூட்டம் ஒன்றில் பேச ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதற்காக, இன்று காலை தனது அமைப்பினருடன் டிரால் நகருக்கு வந்தபோது, அவரை தடுத்து நிறுத்திய போலீசார் அனைவரையும் கைது செய்தனர். கடந்த ஓராண்டு காலமாக சிறையிலும், வீட்டுச் சிறையிலும் தொடர்ந்து அடைத்து வைக்கப்பட்டிருந்து, ஷபிர் அகமது ஷா கடந்த சனிக்கிழமை விடுதலை ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த ஆண்டு பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பர்ஹான் வானி இல்லத்திற்கு செல்ல முயற்சித்ததாகவும், இதை தடுக்கும் வகையில்  கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஷபிர் அகமது ஷா செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்

Next Story