தமிழக உள்துறை முதன்மை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்


தமிழக உள்துறை முதன்மை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமனம்
x
தினத்தந்தி 4 March 2017 4:15 AM IST (Updated: 4 March 2017 1:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழக உள்துறை முதன்மை செயலாளராக நிரஞ்சன் மார்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியும், தமிழ்நாடு சாலை பிரிவு திட்ட இயக்குனருமான (பொறுப்பு) நிரஞ்சன் மார்டி, உள், மதுவிலக்கு மற்றும் கலால்வரித் துறையின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

உள், மதுவிலக்கு மற்றும் கலால்வரி துறையின் முதன்மைச் செயலாளராக இருந்த அபூர்வ வர்மா, சுற்றுலா, கலாசாரம் மற்றும் சமய அறநிலையங்கள் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

சிட்கோவில் அபூர்வா

தமிழகத்தில் வசிக்காத தமிழர்கள் நலன் மற்றும் மறுவாழ்வு கமிஷனர் பி.உமாநாத், தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக் குனராக மாற்றப்பட்டார்.

தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மேலாண்மை இயக்குனர் அபூர்வா, தமிழ்நாடு சிறு தொழிற்சாலைகள் மேம்பாட்டு கழகத்தின் (சிட்கோ) மேலாண்மை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story