ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் விஜயகாந்த் அறிக்கை
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சென்னை,
தமிழகம் முழுவதும் இருக்கின்ற பல லட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்கள் இன்றைக்கு நம்பி இருப்பது ரேஷன் கடைகளில் கிடைக்கும் பொருட்களைத்தான். ஆனால் ஏழை குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருக்கும் அரிசி, மண்எண்ணெய், சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை.
இதனால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்படுகின்றனர். தண்ணீர் பிரச்சினை, ரேசன் பொருட்கள் கிடைப்பதில்லை, வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வறட்சி, போன்ற பல்வேறு பிரச்சினைகளில் தமிழக மக்கள் சிக்கி தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறையும் ஓட்டுக்கு பணம் வாங்கி வாக்களித்ததன் விளைவு இன்றைக்கு சிந்திக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. ஊழல் இல்லாத நல்ல தலைமையை தமிழகத்திற்கு தேர்வு செய்ய வேண்டும் என்று அனைவரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தற்போதுள்ள நிலையில்லாத ஆட்சியான அ.தி.மு.க. மக்களின் நிலைமையை புரிந்துகொண்டு உடனடியாக தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களை தடையில்லாமல் அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும். இந்த நிலை தமிழகத்துக்கு வரக்கூடாது என்று எண்ணித்தான் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்கிற ஒரு நல்ல திட்டத்தை தே.மு.தி.க. அறிவித்து இருந்தது.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
Next Story