7508 திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்
7508 திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில், தொடங்கி வைத்தார்.
சென்னை,
ரூ,1,375,59 கோடி மதிப்பில் சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், வேலூர்,தி.மலை கடலூர்,விழுப்புரம் மாவட்டங்களிலும் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். 7 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்ட அரசுக்கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி வாகன சேவையையும் தொடங்கி வைத்தார். தீயணைப்பு, மீட்புப்பணிகள் துறை வாகன சேவைகளையும் தொடங்கி வைத்தார்.
ரூ111,03 மதிப்பிலான திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார். ரூ.3.04 கோடி மதிப்பிலான உபகரணங்களை தீயணைப்பு துறைக்கு வழங்கினார். வணிக வரித்துறை வாகனங்களையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Next Story