தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்லும் நோக்கில் அரசு செயல்படுகிறது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
ரூ.1487 கோடி மதிப்பிலான 7508 திட்டங்களை சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
சென்னை,
அப்போது அவர் பேசியதாவது:
ரூ.2,247கோடி பயிர் இழப்பு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் எண்ணங்கள் நிறைவேறும் வகையில் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனை தொடர்ச்சியாக பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மக்களின் எண்ணங்களை அறிந்து கேட்காமலேயே செய்யும் அரசு அதிமுக. தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்து செல்லும் நோக்கில் அரசு செயல்படுகிறது.
விதி எண் 110-ன் கீழ் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் நிறைவேற்றம்..
இவ்வாறு அவர் பேசினார்.
அரசு கட்டடங்கள் திறப்பு விழாவில் ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ நட்ராஜ் பங்கேற்றார்.
Next Story