நாடு முழுவதும் 35 லட்சம் தொழிலாளர்கள் பாலியல் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும்
நாடு முழுவதும் 35 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும், எனவே பாலியல் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்றும் தேசிய பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,
சர்வதேச பாலியல் தொழிலாளர்கள் தினத்தையொட்டி சென்னையில் தேசிய பாலியல் தொழிலாளர்கள் கூட்டமைப்பை சேர்ந்த ஜெயா(தமிழ்நாடு, மதுரை), நிஷா குலர்(கர்நாடகா), சங்கீதா, மகாதேவி, சுஜில், (மராட்டியம்), அலமேலு(ஆந்திரா), சந்திரலேகா(கேரளா) ஆகியோர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது ஜெயா கூறும்போது, ‘கடந்த 2000–ம் ஆண்டு ஆண்டு பாலியல் தொழிலாளர்களுடன் நான் சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது போலீசார் அவர்களோடு என்னையும் கைது செய்துவிட்டனர். அதன்பின்னர் நானும் பாலியல் தொழிலில் ஈடுபட தொடங்கி விட்டேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த தொழில் மூலம் கிடைத்த வருமானத்தை வைத்து என்னுடைய சகோதரிக்கு திருமணம் செய்து வைத்துள்ளேன். கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 35 சிறுமிகளை மீட்டு அவர்களுடைய குடும்பத்தில் பத்திரமாக ஒப்படைத்து இருக்கிறேன். தற்போது போலீசார், ரவுடிகள் மூலம் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது. எனவே இந்த தொழிலுக்கு அரசு அங்கீகாரம் அளிக்க வேண்டும்’ என்றார்.
நல்ல வருவாய்
நிஷா குலர் கூறும்போது, ‘அரசு வேலைக்கு சென்றால் ரூ.10 ஆயிரம் தான் சம்பளம் தருவார்கள். இந்த பணத்தை வைத்து குழந்தைகள், பெற்றோர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்ள முடியாது. பாலியல் தொழில் மூலம் நல்ல வருவாய் கிடைக்கிறது. இதன் மூலம் எங்களுடைய குழந்தைகள், பெற்றோர்களை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறோம். எனவே தான் விருப்பப்பட்டு இந்த தொழிலை செய்து வருகிறோம். யாரும் கட்டாயப்படுத்தவில்லை. பாலியல் தொழிலுக்கு அரசு அங்கீகாரம் வழங்கினால் சமுதாயத்தில் எங்களுக்கு மரியாதை கிடைக்கும்’ என்றார்.
சந்திரலேகா கூறும்போது, ‘நான் 13 வயதில் இருந்து பாலியல் தொழில் செய்து வருகிறேன்.’ என்றார். சுகில் கூறும்போது, பாலியல் தொழிலை நான் 18 வயதில் விரும்பி தேர்ந்தெடுத்தேன். இந்த தொழில் மோசமான தொழில் இல்லை. மரியாதையான தொழில்’ என்றார்.
மகாதேவி கூறும்போது, ‘நாங்கள் பாலியல் தொழில் செய்வதால் எங்களுடைய குழந்தைகளை சமுதாயம் கேவலமாக பார்க்கிறது’ என்றார். அலமேலு, கூறும்போது, நாங்கள் விருப்பப்பட்டு பாலியல் தொழில் செய்து வந்தாலும், யாரையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலுக்கு வர அனுமதிக்கமாட்டோம்’ என்றார்.
35 லட்சம் பேர்
பின்னர் அனைவரும் கூட்டாக கூறும்போது, ‘புள்ளி விவர ஆய்வின்படி, இந்தியாவில் 35 லட்சம் ஆண், பெண், திருநங்கை பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் தோராயமாக 75 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.
சுகாதாரத்துறை பாலியல் தொழிலை அங்கீகரிக்கிறது. ஆனால் தொழிலாளர் நலத்துறை, சமூக நலத்துறையும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அரசு துறைகளில் உள்ள முரண்பாடுகள் களையப்பட வேண்டும். பாலியல் தொழிலாளர்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கி எங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்த உறுதுணையாக இருக்க வேண்டும்.’ என்றனர்.

Next Story