ஹைட்ரோகார்பன் திட்டத்தினை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம்: முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


ஹைட்ரோகார்பன் திட்டத்தினை தமிழகத்தில் அனுமதிக்கமாட்டோம்:  முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 4 March 2017 10:46 PM IST (Updated: 4 March 2017 10:45 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் ஆர்.கே.நகரில் மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என கூறியுள்ளார்.

ஆர்.கே.நகர்,

ஹைட்ரோகார்பன் திட்டம் வருவதற்கு காரணம் தி.மு.க.  அவர்கள் தற்பொழுது இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக உள்ளது.

ஹைட்ரோகார்பன் திட்டத்தினை தமிழகத்தில் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.  விவசாயிகளுடனான பேச்சுவார்த்தையை சிலர் அரசியலாக்குகின்றனர்.  தமிழக மக்களுக்கு பாதகமாக இருக்கும் திட்டங்களை அ.தி.மு.க. அரசு எதிர்க்கும் என கூறியுள்ளார்.

அவர், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா இறந்த பின்னர் தற்பொழுது ஒரு சிலர் விசாரணை கமிஷன் கேட்பது ஏன்?  அவர் இறந்த உடனேயே ஏன் அவர்கள் சந்தேகம் எழுப்பவில்லை என்றும் கேட்டுள்ளார்.

110 விதியின் கீழ் திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை என எதிர்க்கட்சி கூறுவது ஏற்கத்தக்கதல்ல.  ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சியினரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Next Story