தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாமல் வதந்தி பரப்புகின்றனர் ஜெ.தீபா பேச்சு


தேர்தலில் நான் போட்டியிடுவதை விரும்பாமல் வதந்தி பரப்புகின்றனர் ஜெ.தீபா பேச்சு
x
தினத்தந்தி 5 March 2017 3:15 AM IST (Updated: 5 March 2017 12:16 AM IST)
t-max-icont-min-icon

நான் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பாத சிலர் வதந்திகளை பரப்புவதாக ஜெ.தீபா கூறினார்.

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் தமிழக அரசியலில் அடுத்தடுத்து சில அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டன. அவருடைய அண்ணன் மகள் ஜெ.தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று தீபாவின் ஆதரவாளர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையை தீபா தொடங்கினார்.

பொதுவாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெ.தீபா தன்னுடைய ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றுவது வழக்கம். அதேபோல் நேற்று மாலை தன் வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:–

வதந்தி

என் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தெரிவிக்க வந்த அனைவருக்கும் நன்றி. எங்களை செயல்பட விடாமல் பணிகளை முடக்க சில பேர் எனக்கு அரசியல் தெரியாது என்றும், நான் முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறேன் என்றும் வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

நான் தேர்தலில் போட்டி போடுவதை விரும்பாத சிலர் இப்படி செயல்படுகின்றனர். இதை மக்களாகிய நீங்கள் தான் கேட்க வேண்டும். என் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து நமது பேரவையின் வளர்ச்சிக்காக பணியாற்றுங்கள்.  இவ்வாறு அவர் பேசினார்.


Next Story