குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு: தாமிரபரணி ஆற்றில் இறங்கி 3-வது நாளாக போராட்டம்
குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி நேற்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் உள்ள வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது.
இதற்கு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள். நெல்லை தாமிரபரணி ஆற்றில் இறங்கி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை கொக்கிரகுளம் குருந்துடையார்புரம் பகுதி தாமிரபரணி ஆற்றில் போராட்டம் நடந்தது.
அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தாமிரபரணி ஆற்று தண்ணீருக்குள் இறங்கி கட்சி கொடிகளுடன் நின்று, குளிர்பான நிறுவனங்கள் தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு அனுமதி வழங்கக்கூடாது எனவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
பள்ளி மாணவர்களும் பங்கேற்பு
இதில் பள்ளிக்கூட மாணவர்கள் சிலரும் கலந்து கொண்டனர். பின்னர் அங்குள்ள பாறை மீது அமர்ந்து தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பாளையங்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்களும் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று தாமிரபரணியை பாதுகாக்கக் கோரியும், குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்தினார்கள்.

Next Story