ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிசிடிவிகள் அகற்றம் பொன்னையன்
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டு உள்ளன என பொன்னையன் குற்றம் சாட்டிஉள்ளார்.
சென்னை,
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்து உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றச்சாட்டுகளை சசிகலா தரப்பு மறுத்து வருகிறது. ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கையும் வழங்கப்படவில்லை என பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.
சென்னை கீரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைத்து முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி பேசிவருகிறார். 75 நாட்களாக ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக சரியான அறிக்கையானது வழங்கப்படவில்லை என இன்றும் குற்றம் சாட்டிஉள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
பொன்னையன் பேசுகையில் ஜெயலலிதாவை சிகிச்சைக்கு வெளிநாட்டிற்கு அழைத்து செல்லவேண்டும் என கோரிக்கையானது நிராகரிக்கப்பட்டது என குற்றம் சாட்டிஉள்ளார். வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லவேண்டும் என்ற கோரிக்கையை சசிகலா தரப்பு ஏற்கவில்லை என குற்றம் சாட்டிய பொன்னையன் ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது என்று கூறிஉள்ளார். ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் நீங்க முறையான நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என பொன்னையன் கூறிஉள்ளார்.
Next Story