ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வம் அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்


ஜெயலலிதாவின் மரணம் குறித்து பன்னீர்செல்வம் அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்
x
தினத்தந்தி 5 March 2017 9:17 PM IST (Updated: 5 March 2017 9:17 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தவறான கருத்து தெரிவித்து வரும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக உடைந்து உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பு குற்றச்சாட்டுகளை சசிகலா தரப்பு மறுத்து வருகிறது. ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கையும் வழங்கப்படவில்லை என பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரம் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தவறான கருத்து தெரிவித்து வரும் பன்னீர்செல்வத்தின் செயல் கண்டனத்திற்குரியது.
அப்பலோ மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு உலக தரம் வாய்ந்த சிகிச்சை அளித்தனர். எய்ம்ஸ் மற்றும் வேலூர் சிஎம்சி மருத்துவர்களும் ஜெயலலிதாவிற்கு தரமான சிகிச்சை அளித்தனர். உண்மை நிகழ்வுகள் பற்றி நன்கு அறிந்தும் பன்னீர்செல்வம் அபத்தமான கருத்துக்களை கூறி வருகிறார்.  பன்னீர்செல்வத்திற்கு தெரியாமல் எந்த சிகிச்சையும் ஜெயலலிதாவுக்கு தரப்படவில்லை. அரசியல் ஆதாயம் பெறவே இதுபோன்ற கருத்துகளை பன்னீர்செல்வம் வெளியிடுகிறார்.ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை, மரணம் பற்றி சந்தேகம் இல்லை என கூறியவர் பன்னீர்செல்வம்.

Next Story