ஓ.பன்னீர்செல்வம் அணியின் சின்னம் முடக்கப்படுமா? துணை தேர்தல் கமிஷனர் பதில்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது.
சென்னை,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த சின்னத்தை அவர்கள் தவறாக பயன்படுத்துவதாக டி.டி.வி.தினகரன் சார்பில் தேர்தல் கமிஷனில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக சென்னை வந்துள்ள துணை தேர்தல் கமிஷனர் உமேஷ் சின்ஹாவிடம், டி.டி.வி.தினகரன் தரப்பினரின் புகார் குறித்து செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு மின்கம்பம் சின்னம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் அளித்துள்ள புகாரின் தன்மை குறித்து சட்ட வல்லுனர்கள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறினார். இந்த மனு குறித்து அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உமேஷ் சின்ஹா தெரிவித்தார்.
Next Story