தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வரவில்லை 4–ந்தேதி தான் கிடைக்கும்
சென்னை,
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் கடைசி நாளில் சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டு விடும்.
ஆனால் நேற்று நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் யாருக்கும் சம்பளம் அவர்களது வங்கி கணக்கில் பட்டுவாடா செய்யப்படவில்லை. அடுத்தடுத்த நாட்களும் (சனி, ஞாயிறு) விடுமுறை தினங்கள் என்பதால் அந்த 2 நாட்களும் சம்பளம் பட்டுவாடா செய்யப்படாது. 3–ந்தேதி (திங்கட்கிழமை) அனைத்து அலுவலகங்களும் சம்பள பணம் வங்கிகளில் செலுத்தப்படும். அந்தவகையில் 4–ந்தேதி தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பள பணம் கிடைக்க உள்ளது.
மேற்கண்ட தகவலை என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜன் தெரிவித்து உள்ளார்.
Next Story