ஆர்.கே.நகரில் தேர்தலை தள்ளி வைக்க சதித்திட்டமா?


ஆர்.கே.நகரில் தேர்தலை தள்ளி வைக்க சதித்திட்டமா?
x
தினத்தந்தி 1 April 2017 2:45 AM IST (Updated: 1 April 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

சென்னை,

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரசாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. களத்தில் இருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், ஆர்.கே.நகர் தேர்தலை தள்ளிவைக்க சதித்திட்டம் நடப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அ.தி.மு.க. அம்மா கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரனும் தேர்தலை தள்ளிவைக்க சதி நடக்கிறது என்று புகார் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தேர்தலை தள்ளி வைப்பதற்கு சுயேச்சை வேட்பாளர்களை பலிகொடுக்கும் முயற்சி நடப்பதாகவும் ‘வாட்ஸ்-அப்’பில் தகவல் பரவியுள்ளது. நேற்று முன்தினம் ஆர்.கே.நகர். தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் கணேஷ் (வயது 52) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த மனுவில், தனது வீடு அருகே 2 மர்மநபர்கள் நோட்டமிடுகிறார்கள் என்றும், இரண்டு நாட்களாக வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், செல்போனில் பேசும் மர்மநபர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story