ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு கொடுத்த தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது
ஆர்.கே.நகர் தொகுதியில் ஓட்டுக்காக ‘காமாட்சி’ விளக்கு கொடுத்த தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி ஓட்டுப் பதிவு நடக்கிறது. 10-ந்தேதியுடன் பிரசாரம் ஓய்வதால் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் உச்சக் கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அமைதி யான முறையில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படையினர் 24 மணி நேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
ஆனால் அரசியல் கட்சியினரோ, வாக்காளர்களை கவர்வதற்காக பணம் கொடுக்கும் நடவடிக்கை களில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர். பரிசு பொருட்கள் வினியோகமும் நடந்து வருகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக் குட்பட்ட 40-வது வார்டில் திருவள்ளுவர் குடியிருப்பில் நேற்று இரவு 11.30 மணி அளவில் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக பறக்கும் படை அதிகாரி மோகன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அ.தி.மு.க.வை அம்மா அணியை சேர்ந்த சிலர் வீடு வீடாக ஓட்டுக்கு காமாட்சி விளக்கை பரிசளிப்பது தெரிய வந்தது. அவர்களை போலீசாரின் உதவியுடன் பறக்கும் படையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். சம்பவ இடத்தில் வைத்து சிவக்குமார், பிரசன்னா ஆகிய இருவரும் சிக்கினர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருவள்ளூரை சேர்ந்த கோபிநாத் என்பவரும் பிடிபட்டார்.
3 பேரிடமிருந்தும் 15 விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவக்குமார், பிரசன்னா இருவரிடமும் 9 விளக்குகள் இருந்தன. கோபிநாத் 6 விளக்குகளை வைத்திருந்தார். புதுவண்ணாரப்பேட்டை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் களிடம் இருந்து 2 கார்கள், ஒரு மொபட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே ஆர்.கே.நகர் தொகுதியில் 38-வது வட்டத்தில் பணம் கொடுத்து பிடிபட்ட கருணாமூர்த்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story