ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை ஓ.பன்னீர்செல்வம்


ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை ஓ.பன்னீர்செல்வம்
x
தினத்தந்தி 1 April 2017 12:08 PM IST (Updated: 1 April 2017 12:08 PM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் முழுமையாக எனக்குத் தெரியாது.ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்.

சென்னை

தனியார் டெலிவிஷன் ஒன்றுக்கு முன்னாள் முதல்-அமைச்சர்  ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

ஓ.பன்னீர்செல்வம்.ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை சசிகலா குடும்பத்தினரை கட்சிக்குள் அனுமதிக்கவில்லை. ஆர்.கே.நகரில் தேசிய, மாநில கட்சிகள் போட்யிடுவதால் இரு அணிக்கான போட்டி எனக் கூற முடியாது.ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் இல்லை.ஜெயலலிதாவை காப்பாற்ற முடியலையே என்ற ஏக்கம் உள்ளது என்று கூறிய அவர், ஒன்றரைகோடி ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கும் அந்த ஆதங்கம் உள்ளது

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவரை சிகிச்சைக்காக வெளி நாடு கொண்டு செல்லலாம் என தம்பிதுரையிடம் கூறினேன். அவர் சசிகலாவிடம் கூறிய போது, அப்பல்லோ மருத்துவமனை மீது நம்பிக்கையில்லையா என மருத்துவமனை நிர்வாகம் கோபிப்பதாக தம்பிதுரை கூறினார்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கரிடமும் ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு கொண்டு செல்லலாம் என்று கூறினேன். ஜெயலலிதாவுக்கு ஏதாவது அசம்பாவிதம் நேர்ந்தால் மக்கள் நம்மை சும்மாவிட மாட்டார்கள் என்றும் கூறினேன். ஆனால் அமைச்சர் விஜயபாஸ்கர் இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை என்றார்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சையின் முழு பொறுப்பையும் சசிகலாவே ஏற்றிருந்தார்.ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சை விவரங்கள் முழுமையாக எனக்குத் தெரியாது.ஜெயலலிதா மரணத்தை அரசியலாக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு மதுசூதனன் பொதுச்செயலாளர் ஆக்கப்படுவார் என்றதால் தான் முதல்வராக பதவியேற்க ஒப்புக்கொண்டேன்.

10 ஆண்டுகாலமாக நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தேன்.சசிகலா குடும்பத்தினர் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தினார்கள்.என்னை தேர்தலில் போட்டியிட விடாமல் சசிகலாவினர் தடுக்க முயற்சி செய்தனர்

தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரி ரெய்டு நடந்ததால் நடவடிக்கை. பாஜக எங்களை இயக்கவில்லை. அந்த நிலையை நாங்கள் வைக்க மாட்டோம்.பாஜக தலைவர்களுடன் நாங்கள் தொடர்பில் இல்லை.நான் சேகர்ரெட்டியோடு எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை

Next Story