ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்:  கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்
x
தினத்தந்தி 1 April 2017 9:29 PM IST (Updated: 1 April 2017 9:29 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக கூடுதலாக 5 தேர்தல் பார்வையாளர்களை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

தேர்தல் பறக்கும் படையில் மத்திய அரசு பணியாளர்களை ஈடுபடுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

பறக்கும் படை கண்காணிப்பு

தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில், பறக்கும் படையினரை ஜி.பி.எஸ். கருவி வழியே கண்காணிக்க வேண்டும்.  24 மணிநேரமும் பறக்கும் படை குழுக்கள் கண்காணிப்பில் ஈடுபடும் என தெரிவித்துள்ளது.

எஸ்.ஐ.க்கள் இடமாற்றம்

சென்னையில் 115 காவல் உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  அதன்படி ஆயுதப்படை, போக்குவரத்து உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அரசு வாகனங்களுக்கு தடை

இதேபோன்று அமைச்சர்கள், அதிகாரிகளின் வாகனங்கள் ஆர்.கே. நகருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.  அரசு வாகனங்கள் நுழைந்தால் தயக்கமின்றி சோதனை நடத்திடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  ஆய்வு குழு அனுப்பிய அறிக்கையின்படி தேர்தல் ஆணையம் இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

பணியிட மாற்றத்துக்கு உத்தரவு

அரசு உயரதிகாரிகளை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  கூடுதல் காவல் ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்யவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  நகராட்சி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்களையும் இடமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளது.

Next Story