சென்னையில் 1,624 மையங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் போலியோ சொட்டுமருந்து முகாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
சென்னை,
5 வயதுக்கு உட்பட்ட 6 லட்சத்து 94 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு 1,624 இடங்களில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
அரசு மருத்துவமனைகள், பள்ளிகள், மருந்தகங்கள், சத்துணவு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ரெயில் மற்றும் பஸ் நிலையங்களிலும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் மெரினா கடற்கரை, சுற்றுலா பொருட்காட்சி, கோயம்பேடு புறநகர் பஸ் நிலையங்களில் நடமாடும் சொட்டு மருந்து மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக இரண்டாம் தவணை போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 30–ந்தேதி நடைபெறுகிறது. மேற்கண்ட தகவலை பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Next Story