நாட்டில் 30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்


நாட்டில் 30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை மத்திய மந்திரி நிதின் கட்காரி தகவல்
x
தினத்தந்தி 2 April 2017 5:35 AM IST (Updated: 2 April 2017 5:35 AM IST)
t-max-icont-min-icon

நாட்டில் 30 சதவீத ஓட்டுனர் உரிமங்கள் போலியானவை என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

நாக்பூர்,

நாக்பூரில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

போலியானவை

நாட்டில் உள்ள 30 சதவீத ஓட்டுனர் உரிமம் போலியானவை. ஆனால் தற்போது ஓட்டுனர் உரிமங்கள் தொழில்நுட்ப ரீதியாக பதிவு செய்யப்பட்டு இ- சேவை முறைக்கு வரப்போகிறது.

இதன்மூலம் ஓட்டுனர் உரிமத்திற்கு சொந்தமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தை எளிதாக அறிந்துகொள்ள முடியும். எனவே ஏமாற்று பேர்வழிகள் தங்களின் போலி ஓட்டுனர் உரிமத்தை தூக்கி எரிந்துவிட்டு புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வெளிப்படையான நிர்வாகம்

அதுமட்டும் அல்லாமல் ஒருவர் ஓட்டுனருக்கான தேர்வை முடித்த 3 நாட்களுக்குள் அவருக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து ஓட்டுனர் உரிமம் வழக்கப்படுகிறதா? என்பது கண்காணிக்கப்படும். அப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இருந்து அவருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படவில்லை எனில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த வழிமுறை மூலமாக ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகத்தை நடத்த முடியும்.

சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு 50 சதவீதம் என்ஜினீயர்களும் பொறுப்பாவார்கள். என்ஜினீயர்களின் தவறான சாலை வடிவமைப்புகளையும் நாம் விபத்துகளின் போது கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story