சென்னையில் 360 பஸ்கள் உள்பட தமிழ்நாட்டில் 3,300 அரசு பஸ்கள் நிறுத்தம்
சென்னையில் 360 பஸ்கள் உள்பட தமிழ்நாட்டில் 3,300 அரசு பஸ்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது. நஷ்டத்தை தடுக்க இந்த நடவடிக்கையில் போக்குவரத்து கழகம் இறங்கியுள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் 22 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. 8 கோட்டங்களாக செயல்படும் போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
தலைநகர் சென்னையில் தினந்தோறும் 1,488 சாதாரண பஸ்கள், 777 எக்ஸ்பிரஸ் பஸ்கள், 1,131 டீலக்ஸ் பஸ்களும், 92 வால்வோ ஏ.சி. பஸ்களும், 200 சிற்றுந்துகள் என 3 ஆயிரத்து 688 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 838 வழித்தடங்களில் இந்த பஸ்கள் மூலம் 4 ஆயிரத்து 10 சேவைகள் சாத்தியமாகின்றன. தினமும் சராசரியாக 47 லட்சம் மக்கள் பஸ்கள் மூலம் பயணம் செய்கின்றனர். தினந்தோறும் சராசரியாக ரூ.2 கோடியே 80 லட்சம் வருமானம் பஸ் போக்குவரத்து மூலம் அரசுக்கு கிடைக்கின்றது. அடையாறு, சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, வடபழனி, சென்டிரல், அண்ணாநகர், தண்டையார்பேட்டை, மாதவரம் மண்டலங்கள் உள்ளடங்கிய 32 பஸ் டெப்போக்கள் உள்ளன.
நஷ்டம்
இந்தநிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு வருவதால், போதுமான வருவாய் இல்லாத வழித்தடங்களில் செல்லும் பஸ்களின் சேவையை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இதன்மூலம் அரசுக்கு ஏற்படும் தேவையற்ற செலவு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறியே, கடந்த 2011-ம் ஆண்டு மாநகர பஸ் டிக்கெட் கட்டணம் 40 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. பெட்ரோல்-டீசல் மீதான ‘வாட்’ வரி உயர்வு போக்குவரத்து கழகத்தை வெகுவாகவே பாதித்துவிட்டதாக கூறப்படுகிறது. இனியும் டிக்கெட் விலையை ஏற்றினால் அது மக்கள் மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் தேவையற்ற செலவுகளை குறைக்கும் முயற்சியில் போக்குவரத்து கழகம் இறங்கி இருக்கிறது.
பஸ்களின் எண்ணிக்கையை குறைத்தால்...
ஏற்கனவே கூட்ட நெரிசலில் சிக்கி அவதிப்பட்டு பஸ்சில் பயணித்து வரும் பொதுமக்களுக்கு இது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கம் நோக்கி இயக்கப்படும் 27-டி மாநகர பஸ், பெசன்ட்நகரில் இருந்து அயனாவரம் நோக்கி இயக்கப்படும் 23-சி மாநகர பஸ் ஆகியவை எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படுவதால் நகரில் அதிக சேவைகள் இந்த வழித்தடத்தில் ஈடுபடுத்தப்பட்டன.
திருவொற்றியூரில் இருந்து எழும்பூர் (வடக்கு) நோக்கி மாநகர பஸ்கள் (வழித்தட எண்: 28) அதிகமாகவே இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒருங்கிணைந்த கால அட்டவணை இல்லாததால் ஒரே வழித்தடத்தில் பல பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் போதுமான பயணிகள் இல்லாததால், பஸ்கள் நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. எனவே இதுபோன்ற வழித்தடங்களை கண்டறிந்து பஸ்களின் எண்ணிக்கையை குறைத்தால் நஷ்டம் குறையும் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் முடிவு எடுத்திருக்கிறது.
3,300 பஸ்கள் நிறுத்த முடிவு
அந்தவகையில் சென்னையில் உள்ள ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 45 பஸ்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தலைநகர் சென்னையில் மட்டும் 360 பஸ்களின் சேவை படிப்படியாக நிறுத்தபடுகிறது. தமிழகம் முழுவதும் 3 ஆயிரத்து 300 மாநகர பஸ்கள் வரை படிப்படியாக நிறுத்தப்படும்.
இதில் ஏ.சி.பஸ்களும் உள்ளன. அந்தவகையில் பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கம் மார்க்கத்திலும் (21-எச்), தண்டலம் மார்க்கத்திலும் (593) இயக்கப்படும் மாநகர ஏசி பஸ்கள் மற்றும் கோயம்பேட்டில் இருந்து நகர்ப்புறங்களில் புறப்படும் ஏசி பஸ்களின் சேவைகள் கணக்கிடப்பட்டு வருகின்றன. அந்தவகையில் 40 முதல் 50 ஏசி பஸ்கள் கழிக்கப்படலாம் என்று தெரியவருகிறது. பஸ்கள் குறைப்பு முயற்சி படிப்படியாக செய்யப்பட உள்ளது.
உதிரிபாகங்கள் பற்றாக்குறை
ஆனால் முறையான கால அட்டவணை இல்லாததாலும், போக்குவரத்து கழக நிர்வாகமின்மையாலும் தான் பஸ்களின் எண்ணிக்கை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டு உள்ளது. “டிரைவர், கண்டக்டர் உள்பட 75 பேர் வரை செல்லக்கூடிய பஸ்சில், தற்போது 130-க்கும் மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். மேலும் தற்போதுள்ள பணிமனையில் பஸ் உதிரிபாகங்கள் பற்றாக்குறையாலும், பல வாகனங்களில் பழுது ஏற்பட்டிருப்பதாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு”, என்று புகார் கூறியுள்ளனர்.
இதனை தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மறுத்து உள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் சிலர் கூறியதாவது:-
கால அட்டவணைப்படி...
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் தற்போது இலவச பஸ்-பாஸ் சேவைகள் விரிவு படுத்தப்பட்டு உள்ளன. மேலும் முதியோர் இலவச டிக்கெட், 50 சதவீத கல்லூரி பயண அட்டை என போக்குவரத்து கட்டணத்தை முடக்கி இருப்பதாகவே கருதுகிறோம். மேலும் பல சலுகை திட்டங்கள் போக்குவரத்து கழகத்துக்கு வரவேண்டிய வருமானத்தை முடக்கி உள்ளன. இந்த திட்டங்கள் மக்கள் நலனுக்காக அமல்படுத்தப்பட்டது. எனவே அந்த திட்டங்களை பின்வாங்காமல் செயல்படுத்த எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அதேவேளையில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்தாமலும் நடவடிக்கை வேண்டும் என்றும் யோசித்தோம்.
எனவே அந்தவகையில் தேவையற்ற வழித்தடங்களில் அதிகளவில் செல்லும் பஸ்களின் சேவையை குறைத்திட முடிவு செய்து, அதற்கேற்றவாறு கால அட்டவணை தயாரிக்க இருக்கிறோம். தனியார் பஸ் நிறுவன வளர்ச்சி காரணமாக கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை சுமார் 5 லட்சம் பயணிகள் வருகையை அரசு பஸ்கள் இழந்திருக்கிறது. இதை சரிசெய்யவும், பள்ளி-கல்லூரிகள், அலுவலகம் செல்வோரின் நேரத்திற்கேற்றவாறு திட்டமிட்டு பஸ்களின் சேவை அமைக்கவும் முடிவு செய்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story